Re broadcasting Reserved | Copyright © Worldtamilnews.com

அண்ணா பிறந்தநாளில் கைதிகளை விடுவிக்க கூடாது-சாமி 
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு ஆஜராகிய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி, அண்ணா பிறந்த நாளையொட்டி ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட உள்ளதை எதிர்த்து வழக்கு பதிவு செய்தார். அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி அன்று, ஆயுள் தண்டனை கைதிகள் 2000 பேரை விடுவிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியான நாளிதழ் ஒன்றைக் சுட்டிக்காட்டினார். இது நாட்டின் கொள்கைக்கு விரோதமானது என்றும் அவர் குறிப்பட்டார். எனவே தமிழக அரசு அவ்வாறு உத்தரவிட்டிருந்தால் அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஏற்கனவே தாம் கடந்த 2008ஆம் ஆண்டு கைதிகள் விடுவிப்பை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விரைவுப்படுத்த வேண்டும் என்றும் சுப்பிரமணிய சுவாமி கோரிக்கை விடுத்தார். சுப்பிரமணிய சுவாமியின் வாதத்தை ஏற்ற தலைமை நீதிபதி அடங்கிய பெஞ்ச் வரும் 8ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டுள்ளது.

 

திமுக கூட்டணிக்கு பாமக வர வேண்டும் - திருமாவளவன்
வட மாவட்டங்களில் திமுக கூட்டணி வலிமை பெற பாமக பயன்படும். எனவே திமுக கூட்டணிக்கு பாமக வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறினார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழர் இறையாண்மை மாநாடு நடைபெற உள்ளது. இலங்கை தமிழர் பிரச்சனையில் அரசியல் அறியாமையால் சில கட்சிகள் அவதூறானப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.வெளியுறவுத்துறைச் செயலாளர் நிருபமா ராவ், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோரின் இலங்கை பயணத்தால் தமிழர்களுக்கு எந்தவித பயனும் ஏற்படபோவதில்லை.திமுக கூட்டணியை மேலும் வலிமைப்படுகின்ற வகையில் விடுதலைச் சிறுத்தைகளின் பங்களிப்பு அமையும். மீண்டும் திமுக கூட்டணியே தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும்.வரும் சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறும் வகையில், விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும்.

 

திமுக அணிக்கு திருமா அழைப்பு: ராமதாஸ் பதில்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பாமகவின் நலன் விரும்பி ஆவார். அவர் எப்போதும் நட்புறவுடன் இருக்க விரும்புபவர். அந்த அடிப்படையில் அவர் எங்களை திமுக அணிக்கு அழைத்துள்ளார். எங்களை பொறுத்தவரை கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.தமிழ்நாட்டில் மாற்று அணி அமைய வேண்டும். நல்ல மாற்றம் உருவாக வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள். அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்ற வகையில், மாற்றத்தை தருவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். மக்களும் அதற்கு தயாராக வேண்டும். மக்கள் விரும்பும் புதிய கூட்டணிக்கு நான் தலைமையேற்கவும் தயாராக உள்ளேன் என்று தெரிவித்தார் ராமதாஸ் .

 

கடத்தப்பட்ட போலீஸாரை மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரம் : ஒருவர் படுகொலை .
பீகாரின் லகிசாராய் மாவட்டத்தின் கஜ்ரா மலைப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் 7 போலீஸார் கொல்லப்பட்டனர். அப்போது 4 போலீஸாரை, மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர். இந்நிலையில், பீகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 மாவோயிஸ்டுகளை புதன்கிழமைக்குள் விடுவித்தால் மட்டுமே கடத்தப்பட்ட போலீஸாரை விடுவிக்க முடியும் என்று மாவோயிஸ்டுகள் கெடு விதித்திருந்தனர். கெடு முடிந்த பின்னரும் சிறையிலிருந்த மாவோயிஸ்டுகள் விடுவிக்கப்படாத நிலையில், அவர்களை விடுவிக்க இன்று காலை பத்து மணி வரை அவகாசம் நீட்டிப்பதாக மாவோயிஸ்டுகள் அறிவித்திருந்தனர். இதனிடையே, போலீஸாரைக் கடத்திய மாவோயிஸ்டுகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களின் எல்லைப்பகுதியில் ஹெலிகாப்டர் மூலமும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவோயிஸ்டுகள் அளித்த இரண்டாம் காலக்கெடுவும் முடிவடைந்த நிலையில் , நான்கு பேரில் ஒருவரை மாவோயிஸ்டுகள் படுகொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் பீகார் அரசை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.